இலங்கையில் இரண்டு விதமான அகழ்வுப்பணிகள் நடக்கின்றன. ஒன்று, இலங்கை அரசு திட்டமிட்டுச் செயற்படுத்துகின்ற தொல்பொருள் அகழ்வுப் பணி. இது பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை விரிவாக்குவதற்கும் நிலைப்படுத்துவதற்குமான ஏற்பாடு. வடக்குக் கிழக்கு மாகாணங்களில்தான் இந்தப் பணி மும்முரப்படுத்தப்பட்டுள்ளது. இது தேவையில்லாத ஒரு பிரச்சினையும் கூட. இரண்டாவது, மனித உரிமை மீறல்களோடு தொடர்புடையது. காணாமலாக்கப்பட்டு அல்லது அரசியல் முரண்பாடுகள் காரணமாகக் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம்…
எழுதப்படும் காலத்திலும் அதற்குப் பிறகான காலவெளியிலும் உயிர்கொண்டிருக்கும் எழுத்துக்கு ஒளி அதிகம். அந்த ஒளி, அந்த எழுத்தையும் அதை எழுதிய எழுத்தாளரையும் அல்லது கவிஞரையும் காலநீட்சியில் உயிர்ப்போடு வைத்து விடுகிறது. வள்ளுவர், கம்பன், கபிலர், ஔவை, சேக்ஸ்பியர், ஷெல்லி, பாரதி, தாகூர், டோல்ஸ்ரோய், தஸ்தாயெவ்ஸ்கி, செகோவ், புதுமைப்பித்தன் எல்லோரும் இந்த வகையில் அமைந்தவர்களே. அவர்களுடைய எழுத்துகளும் அவ்வாறு அமையப்பெற்றவையே.…
பழகிய வழியில் பயணிப்பதை விடப் புதிய வழியில் பயணிக்கும்போது தெரியும் காட்சிகள் அதிக ஈர்ப்பை அளிப்பதுண்டு. அதிலுள்ள புதுமையே கூடுதலான கவனத்தை உண்டாக்குவது. மனித மனத்துக்கு எப்போதும் புதுமையில் ஈடுபாடு அதிகம். புதிய ஆடைகள், புதிய ஆபரணங்கள், புதிய வாழ்க்கை, புதிய சூழல், புதிய பொருட்கள், புதிய எண்ணங்கள், புதிய வடிவங்கள் என இந்தப் புதுமையின் நாட்டம் கட்டற்று விரிந்து கொண்டேயிருப்பது. ஆசையோடு வாங்கி, இன்று நம்முடைய கையில் வைத்திருக்கும் கைபேசி (Mobile phone) அடுத்த ஆறு மாதத்தில் அதனுடைய கவர்ச்சியை இழந்து விடுகிறது. பாவிக்கக்…
ஈழத்தின் வடபுலத்தில் உள்ள இயக்கச்சி கிராமத்தில் பிறந்தவர் கருணாகரன். தற்பொழுது கிளிநொச்சியில் வசித்து வருகிறார். கவிஞராகவே ஈழத்து இலக்கியப்பரப்பில் அடையாளப்படுத்தப்பட்டவர். இருந்த போதிலும் ஒரு கதைசொல்லியாகவும், ஊடகவியலாளராகவும், தொடர் இலக்கியச்செ யற்பாட்டாளராகவும், பதிப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றவராகவும் பொது வெளியில்வெளிப்படுத்திருக்கின்றார். இவர் “வெளிச்சம் ” கலை இலக்கிய இதழின் ஆசிரியராகவும் “காட்சி” ஊடகத்திலும் பணியாற்றியிருக்கிறார். 1980 களில் ஈழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக்கொண்ட கருணாகரன், விடுதலைப்போராட்டம் உச்சம் பெற்ற வேளையிலும், வீழ்ச்சி அடைந்த காலகட்டத்திலும் சமகாலத்தில் பயணித்த ஓர்…