கருணாகரன்

புதியவை

August 30, 2026·கட்டுரைகள்· 6

செம்மணி அகழ்வுகள்: நீதிக்கான தேடலா அல்லது அரசியல் சடங்கா?

இலங்கையில் இரண்டு விதமான அகழ்வுப்பணிகள் நடக்கின்றன. ஒன்று, இலங்கை அரசு திட்டமிட்டுச் செயற்படுத்துகின்ற தொல்பொருள் அகழ்வுப் பணி. இது பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை விரிவாக்குவதற்கும் நிலைப்படுத்துவதற்குமான ஏற்பாடு. வடக்குக் கிழக்கு மாகாணங்களில்தான் இந்தப் பணி மும்முரப்படுத்தப்பட்டுள்ளது. இது தேவையில்லாத ஒரு பிரச்சினையும் கூட. இரண்டாவது, மனித உரிமை மீறல்களோடு தொடர்புடையது. காணாமலாக்கப்பட்டு அல்லது அரசியல் முரண்பாடுகள் காரணமாகக் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம்…

August 30, 2026·விமர்சனங்கள்· 4

உறைய முடியாக்காலம் சேரனின் கவிதைகள்

எழுதப்படும் காலத்திலும் அதற்குப் பிறகான காலவெளியிலும் உயிர்கொண்டிருக்கும் எழுத்துக்கு ஒளி அதிகம். அந்த ஒளி, அந்த எழுத்தையும் அதை எழுதிய எழுத்தாளரையும் அல்லது கவிஞரையும் காலநீட்சியில் உயிர்ப்போடு வைத்து விடுகிறது. வள்ளுவர், கம்பன், கபிலர், ஔவை, சேக்ஸ்பியர், ஷெல்லி, பாரதி, தாகூர், டோல்ஸ்ரோய், தஸ்தாயெவ்ஸ்கி, செகோவ், புதுமைப்பித்தன் எல்லோரும் இந்த வகையில் அமைந்தவர்களே. அவர்களுடைய எழுத்துகளும் அவ்வாறு அமையப்பெற்றவையே.…

August 30, 2026·விமர்சனங்கள்· 4

மாஜிதாவின் “சுவை” பெண் வெற்றியின் கொண்டாட்டம்

பழகிய வழியில் பயணிப்பதை விடப் புதிய வழியில் பயணிக்கும்போது தெரியும் காட்சிகள் அதிக ஈர்ப்பை அளிப்பதுண்டு. அதிலுள்ள புதுமையே கூடுதலான கவனத்தை உண்டாக்குவது. மனித மனத்துக்கு எப்போதும் புதுமையில் ஈடுபாடு அதிகம். புதிய ஆடைகள், புதிய ஆபரணங்கள், புதிய வாழ்க்கை, புதிய சூழல், புதிய பொருட்கள், புதிய எண்ணங்கள், புதிய வடிவங்கள் என இந்தப் புதுமையின் நாட்டம் கட்டற்று விரிந்து    கொண்டேயிருப்பது. ஆசையோடு வாங்கி, இன்று நம்முடைய கையில் வைத்திருக்கும் கைபேசி (Mobile phone) அடுத்த ஆறு மாதத்தில் அதனுடைய கவர்ச்சியை இழந்து விடுகிறது. பாவிக்கக்…

August 29, 2026·கட்டுரைகள்· 5

குரலற்றவரின் குரல் – கோமகன்

ஈழத்தின் வடபுலத்தில் உள்ள இயக்கச்சி கிராமத்தில் பிறந்தவர் கருணாகரன். தற்பொழுது கிளிநொச்சியில் வசித்து வருகிறார். கவிஞராகவே ஈழத்து இலக்கியப்பரப்பில் அடையாளப்படுத்தப்பட்டவர். இருந்த போதிலும் ஒரு கதைசொல்லியாகவும், ஊடகவியலாளராகவும், தொடர் இலக்கியச்செ யற்பாட்டாளராகவும், பதிப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றவராகவும் பொது வெளியில்வெளிப்படுத்திருக்கின்றார். இவர் “வெளிச்சம் ” கலை இலக்கிய இதழின் ஆசிரியராகவும் “காட்சி” ஊடகத்திலும் பணியாற்றியிருக்கிறார். 1980 களில் ஈழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக்கொண்ட கருணாகரன், விடுதலைப்போராட்டம் உச்சம் பெற்ற வேளையிலும், வீழ்ச்சி அடைந்த காலகட்டத்திலும் சமகாலத்தில் பயணித்த ஓர்…

ஒரு வாசிப்பு

மாற்று விசாரணைக் கமிஷன்! ஷோபாசக்தியின் கதைகளைக் குறித்த அவதானிப்பு

01 சிதைக்கவே முடியாது என்னையும் என்னுடைய ஆன்மாவையும். அழிக்கும்தோறும் உயிர்ப்பேன். உயிர்ப்பே எனது விதி. நான் என்பது, நான் மட்டுமல்ல, என்னுடைய சனங்களின் துயரம். என்னுடைய சனங்கள் சிந்திய கண்ணீர்த்துளியினதும் ரத்தத்தினதும் ஆறாச்…

வாசிக்க
அனைத்தையும் படிக்க

ஓர் உரையாடல்

போருக்குப் பிந்தைய வாழ்வியல் மற்றும் இலக்கியச் சூழல்

1. ‘போருக்குப் பிந்தைய இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் போக்கு’களாக நீங்கள் பார்க்கும் அம்சங்கள்?   இந்தக் கேள்வி, ஈழ இலக்கியத்தை அரசியல் நிலைப்பட்டே புரிந்து கொள்ள முற்படுகிறது. அதில் உண்மையும் உண்டு. தவிர்க்க முடியாத…

வாசிக்க
அனைத்தையும் படிக்க

ஒரு சிறுகதை

அமரசிறி

01 உளநல மருத்துவர் மேகதாஸ் ஒரு புதன்கிழமை என்னை அழைத்திருந்தார். அவரிடம் சென்றபோது இளைய மருத்துவ அணியினருக்கு உளநிலை விரிவுரை நடந்து கொண்டிருந்தது. அது முடியட்டும் என்று அங்கேயிருந்த புத்தக அடுக்கிலிருந்து புத்தகங்களை…

வாசிக்க
அனைத்தையும் படிக்க